இதழ் - 133 இதழ் - ௧௩௩
நாள் : 10- 11 - 2024 நாள் : ௧௦ - ௧௧ - ௨௦௨௪
அநபாய சோழன்
இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு அநபாயன் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அப்பெயர் சில ஊர்களுக்கு அமைந்துள்ளது. சோழ மண்டலத்தில் ஜயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டில் அநபாயபுரம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று இருந்ததாகச் சாசனம் கூறுகின்றது. தொண்டை நாட்டில் அரும்பாக்கம் என்னும் ஊரில் இருந்த சில நிலங்களை ஓர் எடுப்பாகச் சேர்த்து, அருபாய நல்லூர் என்று பெயரிட்டுத் திரு ஆலக் கோயிலுடையார்க்கு அநபாய சோழன் அளித்தான்.
மூன்றாம் குலோத்துங்கன்
அதேபோல மூன்றாம் குலோத்துங்கன் காலத்துச் சாசனத்தால் தென் ஆர்க்காட்டு வேலூரில் குலோத்துங்க சோழ விண்ணகரம் விளங்கிற்று என்பது தெரிகின்றது. இம் மன்னன் பெயரால் உண்டாகிய குலோத்துங்க சோழ நல்லூர் அத்திருக் கோவிலுக்குத் தேவதானமாக வழங்கப்பட்டது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment