இதழ் - 190 இதழ் - ௧௯0
நாள் : 08 / 02 / 2026 நாள் : 0௮ / 0௨ / ௨௦௨௬ கொங்கு நாட்டுத் திரு மலைகளுள் ஒன்று திருச்செங்குன்றம். அம்மலையைச் சார்ந்த தலத்தைக் கொடி மாடச் செங்குன்றூர் என்று தேவாரம் போற்றுகின்றது. செந்நிறமுடையதாயிருத்தலால் செங்குன்றம் என்னும் பெயர் அதற்கு வந்தது போலும்! இந் நாளில் சேலம் நாட்டில் திருச்செங்கோடு என வழங்கும் ஊரே பழைய செங்குன்றூர் ஆகும்.
நெற்குன்றம்
நெற்குன்றமும், நற்குன்றமும் இறைவன் கோயில் கொண்ட மலைப் பதிகள் என்று திருஞான சம்பந்தர் கூறியருளினார். நெற்குன்றம் என்னும் பெயர் வாய்ந்த ஊர்கள் தமிழ்நாட்டிற் பலவாகும். ஆயினும், அவற்றுள் ஒன்று திருநெற்குன்றம் என்று சாசனத்திற் குறிக்கப்படுவதால் அதனையே வைப்புத் தலமாகக் கொள்ளலாம். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முசிரி வட்டத்தில் இப்பொழுது தின்னகோணம் என வழங்கும் ஊரே திருநெற்குன்றம் என வழங்கப்பட்டு வருகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment