இதழ் - 86 இதழ் - ௮௬
நாள் : 17-12-2023 நாள் : ௧௭-௧௨-௨௦௨௩
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
ரணம் | போர், புண் |
வயது | அகவை |
தேகாப்பியாசம் | உடற்பயிற்சி |
சொப்பனம் | கனவு |
சங்கீதம் | இசை |
- இருவருக்கிடையில் நடந்த சண்டையில் அந்த இடமே ரணகளம் ஆகிவிட்டது.
- இருவருக்கிடையில் நடந்த சண்டையில் அந்த இடம் போர்க்களம் ஆகிவிட்டது.
- காலில் ஏற்பட்ட ரண வேதனை தாங்க முடியவில்லை.
- காலில் ஏற்பட்ட புண் வேதனை தாங்க முடியவில்லை.
- ஞானசம்பந்தர் மூன்று வயதில் ஞானம் பெற்றார்.
- ஞானசம்பந்தர் மூன்று அகவையில் ஞானம் பெற்றார்.
- ஒவ்வொரு நாளும் தேகாப்பியாசம் செய்வது நல்லது.
- ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
- சிவபெருமான் நந்தனாருக்கு சொப்பனத்தில் அருள்செய்தான்.
- சிவபெருமான் நந்தனாருக்கு கனவில் அருள்செய்தான்.
- சமண சமயத் துறவிகள் சங்கீதத்தை வெறுப்பவர்கள் ஆவர்.
- சமண சமயத் துறவிகள் இசையை வெறுப்பவர்கள் ஆவர்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment