பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 71                                                                                           இதழ் - 
நாள் : 03-09-2023                                                                          நாள் : 0-0௯-௨௦௨௩
  
 
   
பழமொழி – 71

” எருதின் நோவு காக்கைக்குத் தெரியுமா?
 
விளக்கம்
    எருதின் உடம்பில் உள்ள காயத்தினைக் காக்கை கொத்தித் தின்னும். இத்தருணத்தில் எருதின் வலி காக்கைக்குத் தெரியாது. என்பது இப்பழமொழியின் பொருளாகும்.


” எருதின் நோவு காக்கைக்குத் தெரியுமா? 
 
உண்மை விளக்கம்
     எருதின் வலி எவ்வாறு காக்கைக்குத் தொிவதில்லையோ அதைப்போல ஒருவர் மற்றவரின் சூழ்நிலை தெரியாமல் துன்பம் தரக்கூடிய செயல்களையும் சொற்களையும் சொல்லிக் காயப்படுத்துவர் என்பதையே “எருதின் நோவு காக்கைக்குத் தெரியுமா?” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
 
     மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment