இதழ் - 68 இதழ் - ௬அ
நாள் : 13-08-2023 நாள் : ௧௩-0அ-௨௦௨௩
பழமொழி – 68
” இல்லையே ஒன்றுக்(கு) உதவாத ஒன்று ”
விளக்கம்
ஒருவனுக்கு இந்த உலகினில் எதற்கும் உதவாத ஒன்று என எதுவும் இல்லை என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
நன்றே ஒருவர்த் துணையுடைமைப் பாப்பிடுக்கண்
நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் - விண்டோயும்
குன்றகல் நன்னாட! கூறுங்கால் 'இல்லையே
ஒன்றுக்(கு) உதவாத ஒன்று'.
ஒருவர் மற்றொருவரைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல் நன்மையே ஆகும். ஒருவன் தன் தாயின் ஆணைப்படி நண்டைத் துணையாகக் கொண்டு நடந்து செல்கிறான். அப்போது அவனைக் கடிக்க வந்த பாம்பினைத் தன் கொடுக்கால் இறுக்கிப் பிடித்து உயிர் காத்தது நண்டு. எத்தகைய நண்பராயினும் சமயத்துக்கு அவராலும் உதவி கிடைக்கும் என்பதையே 'இல்லையே ஒன்றுக்(கு) உதவாத ஒன்று' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது. மேலும், ஒன்றுக்கும் உதவாத பொருள் என, இவ்வுலகில் ஒன்றுமே இல்லை என்பதை அறியமுடிகிறது.

மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment