இதழ் - 169 இதழ் - ௧௬௯
நாள் : 10 - 08 - 2025 நாள் : ௧0 - ௦௮ - ௨௦௨௫
‘மனிதனது மிகச் சிறந்த கண்டுபிடிப்பு மொழி. எல்லா மொழிகளுமே தனிச்சிறப்புடையதாகவே இருக்கின்றன. அவ்வாறே தமிழ் மொழியும். தமிழ் மொழியின் சிறப்பு அதன் தொன்மை மட்டுமல்ல. தமிழ் மொழியில் பக்தி இலக்கியம் இருப்பதும் உலக அரங்கில் பக்தி இலக்கியத்தினை அதிகளவாக கொண்டிருக்கும் மொழிகளில் இரண்டாவது இடத்தில் தமிழ் மொழி வகிப்பதும் (அ.ச.ஞானசம்பந்தன், பெரியபுராணம் ஓர் ஆராய்ச்சி) பெருமைக்குரியது.
இந்த வகையில் பக்தி இலக்கியம் பாடிய முதல் தமிழ் புலவராக காரைக்கால் அம்மையார் காணப்படுகிறார். தமிழைப் பக்தியின் மொழி எனப் பலரும் புகழக் காரணமாக இருந்தவர் தமிழ் புலவரான காரைக்கால் அம்மையார் ஆவார்.
- தத்துவ, ஞான, பக்தி பாடல்களைத் தமிழுக்குக் கொடுத்துள்ளார் இவர்.
- இசையால் இறைவனைப் பாடும் பதிக மரபைத் தமிழில் தோற்றுவித்தது இவரது பாடல்களே.
- கடைக்காப்பு என்ற ஒரு முறையைத் தமிழ் மொழியில் ஏற்படுத்தியதும் இவரே.
- அந்தாதி என்ற பாடல் வடிவம் இவரால் தமிழில் ஏற்படுத்தப்பட்டது.
- சுடலையில் நடனமாடும் ஈசனின் நடனத்தைப் பேய்கள் பார்ப்பது போல் பாடலைப் பாடித் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர் இவர்.
- பிற்காலத்துக் கலிங்கத்துப்பரணிக்கு இது தான் அடித்தளமாக அமைந்தது எனலாம்.
- காரைக்கால் அம்மையாரால் பதிக முறையில் முதல் முதல் இயற்றப்பட்டது திருவாலங்காடு மூத்த திருப்பதிகம்.
- அந்தாதி இலக்கியத்தின் தொடக்கம் இவர் பாடிய அற்புதத் திருவந்தாதி. பக்திச் செழுமைமிக்க தமிழ் பாடல்கள்.
- வெண்பா, கட்டளைக் கலிப்பா ஆகிய பாவினங்கள் கலந்து பாடப்பட்டது திருவிரட்டை மணிமாலை ஆகும்.
- இவரது பாடல்கள் பக்திச்சுவை மிகுந்ததாக இருந்தாலும் அதில் தமிழின் இனிமையைச் சுவைக்கலாம்.
- தமிழின் மிகச்சிறந்த தமிழ்ப் புலவராகக் காரைக்கால் அம்மையாரைக் குறிப்பிடலாம்.
வரும் கிழமையும் தமிழ்ப் புலவர் வருவார் . .
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment