பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 47                                                                                          இதழ் -
நாள் : 19-03-2023                                                                            நாள் : -0-௨௦௨௩
 
 
       

 

பழமொழி–47

”ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே“
 
    ஒரு வீட்டில் நற்செயல்கள் செய்வதும் அது வெற்றி பெறுவதும் பெண்களால் தான், அதே காரியம் அழிந்து கெட்டுப்போவதும் பெண்களால் தான் என்று நாம் இப்பழமொழிக்குத் தவறாகப் பொருள் விளங்கிக் கொண்டு நம் வீட்டுப் பெண்கள் மீது பழி சுமத்திக் கொள்கிறோம்.

உண்மை விளக்கம்
” நல்லவை ஆவதும் பெண்ணாலே,
       கெட்டவை அழிவதும் பெண்ணாலே “   

     இங்கு நல்லவை, கெட்டவை என்ற சொற்களை மறைத்து நாம் பொருள் விளங்கிக் கொள்கிறோம். ஒரு வீட்டில் நற்செயல்கள் நடப்பதும் பெண்களால் தான், அதே வீட்டில் தீய செயல்கள் நடக்காமல் பாதுகாப்பதும் பெண்களால் தான்  என்பதையே ”நல்லவை ஆவதும் பெண்ணாலே, கெட்டவை அழிவதும் பெண்ணாலே“ என்ற இப்பழமொழி நமக்குப் பொருள் உணா்த்துகிறது.

    இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment