இதழ் - 148 இதழ் - ௧௪௮
நாள் : 09 - 03 - 2025 நாள் : ௦௯ - ௦௩ - ௨௦௨௫
சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் சமண நெறியைப் பின்பற்றியவர். சங்கநூல்களில் இவரது பாடல்கள் முப்பத்தைந்து (35) உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் மூன்று (3), அகத்திணைப்பாடல்கள் முப்பத்தியிரண்டு (32) ஆகும். இவற்றில் பெரும்பாலானவை நெய்தல் திணைப் பாடல்கள் ஆகும். உப்பு விற்கும் உமணர்களை உழவர் என்கிறார்.
இவரது பாடல்கள் தமிழ்ச் சுவை மிகுந்தவை. இதற்கு இவர் கூறும் உவமை ஒன்றே சான்றாகும்.
"சூடாத மாலை போல அவள் வாடிப்போனாள்"
இவரது பாடல் அடிகள் சில
- ”கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு”
- ”உவர்விளை உப்பின் உழா உழவர்”
- ”இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும்”
- ”வானம் வேண்டா விழவின் எம் கானல்”
- ”தணப்பு அருங் காமம் தண்டியோர்”
தமிழ்ப் புலவரான உலோச்சனார் பாடல்களை வாசித்து, தமிழ்ச் சுவையினை அறிந்து கொள்ளலாம்.
(வரும் கிழமை கபிலர் வருவார்…)
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment