பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 115                                                                                              இதழ் - ௧௧
நாள் : 07- 07 - 2024                                                                          நாள் : 0 - 0 - ௨௦௨௪


பழமொழி – 115

“பணமும் பத்தாயிருக்க வேண்டும்
பெண்ணும் முத்தாயிருக்க வேண்டும்
முறையிலேயும் அத்தை மகளாயிருக்க வேண்டும்"

விளக்கம்
     பண்டைய காலத்தில் திருமணத்திற்குப் பெண் தேடும் ஒருவர் பணமும் குறைவாகக் கொடுக்க வேண்டும், பெண்ணும் அழகாக இருக்க வேண்டும்,  முறையும் உறவினர் வகையாக இருக்க வேண்டும் என்பது இப்பழமொழியின்  விளக்கமாகும்.

உண்மை விளக்கம்
   பண்டைய காலத்தில் திருமணத்திற்கு மணமகன் வீட்டார் தான் பெண்ணிற்கு வரதட்சினை கொடுத்து திருமணம் முடித்து வந்தனர். அத்திருமணத்திற்குப் பெண் தேடும் ஒருவரின் ஆசையை இப்பழமொழி குறித்தாலும் சிலர் மற்றவர்களுக்குச் சிறிய உதவி செய்து அதற்குப் பிரதிபலனாகப் பெரிய அளவில் எதிர்பாாத்துக் காத்திருப்பர். தாங்கள் செய்தது சிறிய உதவியாக இருப்பினும் பரிய பலனை எதிர்பார்ப்பவர்களை குறிப்புணர்த்தவே,
     “  பணமும் பத்தாயிருக்க வேண்டும்
       பெண்ணும் முத்தாயிருக்க வேண்டும்
       முறையிலேயும் அத்தை மகளாயிருக்க வேண்டும்“ 
    என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment