இதழ் - 75 இதழ் - ௭௫
நாள் : 01-10-2023 நாள் : 0௧-௧0-௨௦௨௩
வல்லம்
வல்லம் என்ற சொல்லும் அரணுடைய ஊரைக் குறிப்பதாகத் தெரிகின்றது. வட ஆர்க்காட்டிலுள்ள திருவல்லம் என்னும் ஊர் பாண மன்னர்களுக்குரிய கோட்டைகளில் ஒன்றாக விளங்கிற்று. அஃது ஒரு சிறந்த படை வீடாகப் பத்தாம் நூற்றாண்டில் விளங்கியமையை சாசனங்களால் அறியமுடிகிறது.
தஞ்சாவூருக்குத் தென் மேற்கே ஏழு மைல் தூரத்தில் மற்றொரு வல்லம் உண்டு. அக்காலத்தில் அழிந்த அகழிகளே யன்றி, அதன் பழம் பெருமையை அறிதற்குரிய அடையாளம் ஒன்றும் அங்கு இல்லை. தஞ்சை மாநகரைச் சோழ மன்னர்கள் தலை நகராகக் கொள்வதற்கு முன்னே வல்லம் என்னும் கோட்டை, கள்ளரில் ஒரு வகுப்பினருடைய தலைநகரமாகச் சிறந்து விளங்கியது.
வல்லத்தில் அரசு புரிந்த குடியினர் வல்லத்தரசு என்னும் பட்டம் பெற்றனர். வல்லம் சீரழிந்த பின்னர் வல்லத்தரசுகள் கள்ளர் முதுகுடியில் ஒன்றாக கலந்துவிட்டனர்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment