இதழ் - 177 இதழ் - ௧௭௭
நாள் : 05 - 10 - 2025 நாள் : ௦௫ - ௧௦ - ௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
தலைச்சங்காடு
காவிரி ஆற்றின் அருகே அமைந்த தலைச்சங்காடு திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும். அப்பதியில் கட்டுமலை மேலுள்ள திருக்கோயிலில் அமர்ந்த இறைவனை,
" கூடஞ்சூழ் மண்டபமும் குலாய வாசற் கொடித் தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே"
என்று அவர் பாடியுள்ளார். இப்பொழுது தலையுடையவர் கோயில் பத்து என்னும் பெயரால் அப்பதி வழங்கும்.
தலையாலங்காடு
தேவாரப் பாமாலை பெற்ற தலையாலங்காடு தென்னிந்திய வரலாற்றிலும் பெயர் பெற்ற ஊராகும். அது சங்க இலக்கியங்களில் தலையாலங்கானம் என்று குறிக்கப்படுகின்றது. அப்பதியில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும், ஏளைய தமிழ் வேந்தர் இருவருக்கும் கடும்போர் நிகழ்ந்த தென்றும், அப்போரில் பாண்டியன் பெற்ற வெற்றியின் காரணமாகத் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் என்னும் பட்டம் பெற்றான் என்றும் பண்டைய இலக்கியம் கூறுகின்றது. இத்தகைய ஆலங்காட்டைத் திருநாவுக்கரசர் பாடியருளியுள்ளார்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment