பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 38                                                                                         இதழ் -
நாள் : 15-01-2023                                                                            நாள் : -0-௨௦௨
 
 
 
 
நெய்தல் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
 
அளம்
        நெய்தல் நிலத்தில் முக்கியத் தொழில்களுள் உப்புக் காய்ச்சுதல் ஒன்றாகும். உப்பு விளையும் இடத்திற்கு அளம் என்று மற்றொரு பெயருண்டு. தஞ்சை நாட்டில் நன்னிலத்திற்கு அண்மையில் பேரளம் என்னும் உப்பளம் உண்டு. இப்பெயரே அந்நிலத்தின் தன்மையை உணர்த்துகிறது.

கரை
    நெய்தல் நிலத்தில் கடற்கரை சார்ந்த ஊர்கள் பெரும்பாலும் காணப்படுகின்றன. கடற்கரையில் அமைந்த சில ஊர்களின் தன்மையை அவற்றின் பெயர்களே காட்டும். 
 
     பாண்டிய நாட்டில் கீழ்க்கரை என்பது ஓர் ஊரின் பெயர். அக்காலத்தில் முத்து வணிகம் மிகச் சிறப்பாக அமைந்தது. பிற்காலத்தில் மரக்கல வணிக மன்னராக விளங்கிய சீதக்காதி என்னும் முகம்மதிய வள்ளல் அங்கு சிறந்து விளங்கினார். இன்றளவும் வைகை ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்த ஊருக்கு ஆற்றங்கரை என்பது பெயர். முன்னாளில் சங்கு வணிகம் அவ்வூரில் சிறப்பாக நடைபெற்றது. இராமேசுவரம் அண்மையில் இருக்கும் ஊருக்குக் கோடியக்கரை என்னும் ஊர் அமைந்துள்ளது. அது தாலமி முதலிய யவன ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. முற்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கை நாட்டிற்குச் செல்வதற்குக் கோடியக்கரை வழிதான் குறுக்கு வழியாக அமைந்திருந்தது. அதேபோல் கீழ்க்கரை, மேற்குக்கரை, மாங்கரை, மதுகரை, வடகரை முதலிய ஊர்கள் கரையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவையாகும்.
 
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment