இதழ் - 82 இதழ் - ௮௨
நாள் : 19-11-2023 நாள் : ௧௯-௧௧-௨௦௨௩
கிளவி
மொழி
கிளவி என்றால் சொல் என்று பொருள். இரட்டைக்கிளவி என்பது பொருள் இல்லாத ஒரே சொல் இருமுறை அடுக்கி இரட்டைச் சொற்களாக வருவதற்கு இரட்டைக்கிளவி என்று பெயர்.
- இரண்டு இரண்டாக சேர்ந்து வரும்.
- பிரித்தால் பொருள் தராது.
- ஒலிக்குறிப்பு, நிறம் முதலான காரணங்களில் இரண்டு இரண்டாக வரும்.
- குறுகுறு வென நடந்தாள்
- வளவள எனப் பேசினான்
- கலகலவெனச் சிரித்தாள்
அடுக்குத்தொடர்
ஒரு சொல் இருமுறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் ஆகும். இது நான்கு சொற்கள் வரையிலும் அடுக்கி வரும். ஆனால் ஒரு சொல்லாக வராது.
- தனித்தனி சொல்லாக அடுக்கி இரண்டு, மூன்று, நான்கு முறை வரை அடுக்கி வரும்.
- பிரித்தால் தனித்தனியே நின்று பொருள் தரும்.
- அச்சம், விரைவு, அவலம், உவகை, வெகுளி இவற்றின் அடிப்படையில் வரும்.
சான்று
- பாம்பு பாம்பு - (அச்சம்)
- ஓடு ஓடு ஓடு - (விரைவு)
- அந்தோ அந்தோ - (அவலம்)
- வாழ்க வாழ்க - (உவகை)
- பிடி பிடி பிடி பிடி - (வெகுளி)
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment