இதழ் - 181 இதழ் - ௧௭௧
நாள் : 09 - 1 1 - 2025 நாள் : ௦௯ - ௧௧ - ௨௦௨௫
புறப்பொருள் எனப்படுவது, வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது. போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில், போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது.
- அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும்.
- புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை.
- புறத்திணைகள், வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும்.
- தொல்காப்பியர், அகத்திணை – 7, புறத்திணை- 7 எனப் பாகுபடுத்திக் காட்டினார்.
“வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்,
வட்கார் மேற்செல்வது வஞ்சியாம் உட்கா(து)
எதிரூன்றல் காஞ்சி, எயில்காத்தல் நொச்சி,
அதுவளைத்தலாகும் உழிஞை, - அதிரப்
பொருவது தும்பையாம், போர்க்களத்து மிக்கார்
செருவென்றது வாகையாம்”.
மேலும் புறப்பொருளைப் புறப்பொருள்வெண்பாமாலை 12 திணைகளாகப் பகுத்துள்ளது. அந்த 12 திணைகளையும் அந்நூலின் ஆசிரியர் ஐயனாரிதனார் 3 பிரிவுகளாகப் பாகுபடுத்தி உள்ளார். அவை,
- புறம் - 7 (வெட்சி முதல் தும்பை ஈறாக)
- புறப்புறம் - 3 (வாகை, பாடாண், பொதுவியல்)
- அகப்புறம் - 2 (கைக்கிளை, பெருந்திணை) என்பனவாகும்.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment