இதழ் - 80 இதழ் - ௮0
நாள் : 05-11-2023 நாள் : 0௫-௧௧-௨௦௨௩
தமிழ்சொல் தெளிவோம்
தமிழ்நாட்டுத் தமிழில் கலந்துள்ள வடமொழிச் சொற்கள் | தமிழ்சொற்கள் |
யாகம் | வேள்வி |
மேடம் | ஆடு |
விலாசம் | முகவரி |
விவேகம் | பகுத்தறிவு |
யாசகம் | இரத்தல் |
- திருஞானசம்பந்தர் திருவாவடுதுறையில் தனது தந்தையின் யாகத்திற்காக இறைவனிடம் பொற்கிழி பெற்றார்.
- திருஞானசம்பந்தர் திருவாவடுதுறையில் தனது தந்தையின் வேள்விக்காக இறைவனிடம் பொற்கிழி பெற்றார்.
- மேடத்தில் பல வகைகள் உண்டு.
- ஆட்டில் பல வகைகள் உண்டு.
- உனது விலாசம் என்ன?
- உனது முகவரி என்ன?
- விவேகத்தினைப் பலர் பயன்படுத்துவதில்லை.
- பகுத்தறிவினைப் பலர் பயன்படுத்துவதில்லை.
- உன்னிடம் யாசகம் கேட்பவனை இழிவாகப் பார்க்காதே.
- உன்னிடம் இரப்பவனை இழிவாகப் பார்க்காதே.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020.
No comments:
Post a Comment