பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 27                                                                                    இதழ் -
நாள் : 30 - 10 - 2022                                                                  நாள் : - - ௨௦௨௨

 
 

சொல் இலக்கணம்
 
     தமிழமுதம் மின்னிதழின் வழியாக இதுகாறும் எழுத்திலக்கணம் பற்றிப் பார்த்தோம். இனி, எழுத்துகளாலான சொல்லின் இலக்கணம் பற்றிப் பார்ப்போம்.
  • சொல் எழுத்துகளால் உருவானதாக இருக்க வேண்டும்.
  • சொல், எழுத்து இலக்கணத்தில் சொல்லப்பட்ட உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் முதலிய எழுத்துகளால் உருவானதாக இருக்க வேண்டும்.
  • எழுத்துகள் அல்லாமல் வேறு ஓசைகளால் உருவானதை சொல் என்று கூற முடியாது.
  • சொல் என்பது பொருள் தருவதாக இருக்க வேண்டும்.
  • சொல்லை மொழி, பதம், கிளவி என்றும் கூறுவது உண்டு.
  • தொல்காப்பியம் சொல்லை ஓரெழுத்துதொருமொழி, ஈரெழுத்தொருமொழி இரண்டு இறந்து இசைக்கும் பொதுமொழி எனப் பாகுபடுத்தியது.
  • பின்னாளில் வந்த பவணந்தி முனிவர் நன்னூலில் ஈரெழுத்தொருமொழி என்னும் பகுப்பைக் கைவிட்டு தனியெழுத்துப் பதம், தொடரெழுத்துப்பதம் என இரண்டாகப் பாகுபடுத்திக் காட்டினார்.
  • நன்னூல் சொல்லை ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகையாகப் பாகுபடுத்தியது.

சொல் என்பதன் விளக்கம்
     ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.

சான்று
     பூ, தீ, கை, தமிழ், சோலை, இயற்கை.


 
( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment