இதழ் - 179 இதழ் - ௧௭௯
நாள் : 19 - 09 - 2025 நாள் : ௧௯ - ௧௦ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 179
' நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை '
விளக்கம்
நடந்து சென்றால் நாடு முழுதும் உறவு கிடைக்கும் என்றும் சோம்பேரித்தனமாகத் தூங்கினால் நாம் படுக்கும் பாயும் பகை ஆகும் என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.
உண்மை விளக்கம்
சோம்பேரிகள் எத்தகைய முயற்சியும் இல்லாமல் தூங்கிக்கொண்டிருப்பர். அத்தகையோரால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இறுதியில் படுக்கும் பாய் கூட துன்பமாக அமையும். ஆனால் சுறுசுறுப்பாய் இயங்கும் நபர்கள் அனைவரிடமும் முகமலர்ச்சியுடன் பேசி நட்பு கொண்டிருப்பர். இவர்கள் எத்தகைய சிக்கலான சூழலையும் எதிர்கொள்வர் என்பதைக் குறிக்கவே “நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை” என்பதை உணர்த்தவே இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ஆகவே, எத்தகைய சூழலிலும் நாம் சோம்பேரிகளாக இருக்கக்கூடாது; சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்பது இப்பழமொழியின் உள்ளார்ந்த கருத்தாகும்.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் வரும் வாரங்களில் தொடர்ந்து அறிவோம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment