பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 108                                                                                                இதழ் - ௧0௮
நாள் : 19-05-2024                                                                                  நாள் : ௧௯-0ரு-௨௦௨௪



நரசிங்கன்

    மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அரசாட்சிக்கு வந்தவர் நரசிங்கவர்மன். வாதாபி கொண்ட நரசிங்கன் என்று சாசனங்களில் புகழப்படுபகிறார். திருத்தொண்டர் புராணத்தில் குறிக்கப்படுகின்ற சிறுத்தொண்டரைத் தலைவராகக் கொண்ட பெருமை வாய்ந்தவனும் இம்மன்னனே ஆவார். பரஞ்சோதி என்னும் இயற்பெயருடைய சிறுத்தொண்டர்,

    "மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்
    தொன்னகரம் துகளாகச்"

  செய்தார் என்னும் சேக்கிழார் பாடலால் அவர் பெற்ற வெற்றியின் சிறப்பு விளங்குகின்றது.

     மாமல்லன் என்னும் மறுபெயருடைய நரசிங்கவர்மன் தொண்டை நாட்டின் பண்டைத் துறைமுகமாகிய கடல் மல்லையைத் திருத்தினார். கடற்கரையில் கற்கோயில்களைக் கட்டினார். அவர் காலத்தில் மல்லை நகரம் மாமல்லபுரம் என்று பெயர் பெற்றது. அது பிற்காலத்தில் மகாபலிபுரமென மருவிற்று.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment