பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம் - ஒளவை

இதழ் - 138                                                                                     இதழ் - ௧௩௮
நாள் : 15 - 12 - 2024                                                                     நாள் : ௧௫ - ௧௨ - ௨௦௨௪  



ஔவை ( கி.பி. 12 )

   
     உழவுத் தொழிலின் சிறப்பினை, பெருமையினை ஔவை நன்கு அறிந்தவளாக இருந்துள்ளார். 

இத்தொழில் சிறப்புறுவதற்கான வழியாக,

         ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
         நீரருகே சேர்ந்த நிலமுளதாய் - ஊரருகே
          சென்று வரவெளிதாய்ச் செய்வாரும் சொற்கேட்கில்
          என்றும் உழவே இனிது

என்னும் பாடலைப் பாடியுள்ளார். 

     அதாவது, 'உழவர்களுக்குச் சொந்தமாக இரண்டு ஏர்களாவது இருத்தல் வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்கள் இல்லத்தில் விதை இருக்க வேண்டும். உழவுத் தொழிலுக்குத் தேவையான நீர்வளம் அருகே வேண்டும். அதேபோல் ஊருக்குப் பக்கத்தில் வயல் இருத்தல் வேண்டும்.  அதுமட்டுமன்றி சொல்லும்  பேச்சைக் கேட்டு வேலை செய்யும் வேலையாட்களும் நல்லவர்களாக அமைந்தால், உழவுத் தொழிலும் மிக மிக இனிமையானதே' என இத்தொழிலுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிப் பாடியுள்ளார்.

     உலகத்தில் மிகச்சிறந்த தொழிலாகக் காணப்படும் உழவுத் தொழில் பசியைப் போக்குவதால் அறத்தொழில் எனவும் கூறப்படுகிறது. எனினும் இத்தொழிலிலும் பல இடர்கள் காணப்பட்டமையினால் இத்தொழிலை வெறுத்துப் பேசவும் இத்தொழிலை விட்டு விலகவும் மக்கள் சிலர் முற்பட்டனர். இதனை உணர்ந்த ஔவை இத்தொழிலில் காணப்படும் இடர்களைக் களைந்தால் இதுவே முதன்மைத் தொழில் ஆகும் என்பதை இப்பாடல் மூலம் உணர்த்தி உள்ளார்.

ஔவையின் தமிழ்ப் புலமை சிறப்புக்குரியதே.


 ( வரும் கிழமையும் ஔவை வருவார் . . . )


சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர் 
தமிழ்த்துறை 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி 
கோயம்புத்தூர் - 641020

No comments:

Post a Comment