பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 61                                                                                       இதழ் -
நாள் : 25-06-2023                                                                      நாள் : -0-௨௦௨௩
 
  
 
பழமொழி – 61   
” ஊரார் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே “
 
விளக்கம்
     மனைவியானவள் தன் வீட்டில் நெய்யைப் பாிமாறும் பொழுது சிக்கனமாகவும் அதுவே பிறா் வீட்டு நெய்யைப் பாிமாறும் பொழுது தாராளமாகவும் பாிமாறுவாள் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
 
உண்மை விளக்கம்
 
” ஊரார் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே “
 
    இங்கு மனைவியானவள் நெய்யைப் பரிமாறும் விதத்தை வெளிப்படையாகக் கூறுவது போல இருந்தாலும் அநேகம் பேர் தனக்குச் சொந்தமான பொருளைச் சிக்கனமாகவும் பிறருடைய பொருளைத் தாரளமாகவும் பொறுப்பற்ற முறையிலும் பயன்படுத்துவதை மறைமுகமாகச் சுட்டிக் காண்பிக்கவே “ஊரார் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment