இதழ் - 75 இதழ் - ௭௫
நாள் : 01-10-2023 நாள் : 0௧-௧0-௨௦௨௩
பழமொழி – 75
” கொல்லைக்காட்டு நரி பல்லைக் காட்டினது போல ”
விளக்கம்
கொல்லைக்காட்டில் (சவுக்கு மரக்காடு) உள்ள நரி எதிரில் வருபவர்களைப் பார்த்து பயமுறுத்தும் வண்ணம் தன் பல்லைக்காட்டி மிரட்டும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
கொல்லைக்காட்டில் உலாவும் நரிகளானது அடர்ந்த காட்டில் வாழும் நரியைப் போன்ற பெரும் ஆபத்தானது இல்லை. ஆனால் இந்த நரிகளானது அக்காட்டில் எதிரில் வருவோர்களை பயமுறுத்துவது போல தன் கூரிய பல்லைக் காட்டி பயமுறுத்தும்.
இந்த நரிகளைப் போலவே சில மனிதர்கள், தாங்கள் பலசாலிகளாக இல்லாவிட்டாலும் அதை வெளிக்காட்டாமல், தங்கள் உடல் மொழியால் மற்றவர்களை மிரட்டி தனக்கானவற்றைச் சாதித்துக்கொள்வர். இருப்பினும் இவர்கள் பெரும் ஆபத்தானவர்கள் இல்லை. இத்தகையோரை குறிப்பால் உணர்த்தவே “கொல்லைக்காட்டு நரி பல்லைக் காட்டினது போல” என்ற இப்பழமொழியை நம் முன்னோா்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment