இதழ் - 41 இதழ் - ௪௧
நாள் : 05-02-2023 நாள் : 0௫-0௨-௨௦௨௩
தமிழ்ச்சொல் தெளிவோம்
- கதிரவனது பிரகாசத்தினைத் தாங்கும் சக்தி எல்லோருக்கும் கிடையாது.
- கதிரவனது பேரொளியைத் தாங்கும் சக்தி எல்லோருக்கும் கிடையாது.
- ஓதுவார் ஆற்றிய 'திருமுறை' பிரசங்கம் மிகவும் நன்றாக இருந்தது.
- ஓதுவார் ஆற்றிய 'திருமுறை' சொற்பொழிவு மிகவும் நன்றாக இருந்தது.
- மனிதர்களைக் காப்பது இறைவனது கிருபையே.
- மனிதர்களைக் காப்பது இறைவனது அருளே.
- இருதயம் நிறைய நன்றியைச் செலுத்துகிறேன்.
- நெஞ்சம் நிறைய நன்றியைச் செலுத்துகிறேன்.
- அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பது உடலுக்கு நல்லதல்ல.
- அடிக்கடி ஊடுகதிர் எடுப்பது உடலுக்கு நல்லதல்ல.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment