பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 127                                                                               இதழ் - ௧
நாள் : 29- 09 - 2024                                                             நாள் :  -  - ௨௦௨௪




வினையெச்சத்தொடர்

  • முற்றுப்பெறாத வினை வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் எனப்படும்.
சான்று
  • தேடிப் பார்த்தான் 
   இதில் ”தேடி” என்னும் வினையெச்ச சொல் பார்த்தான் என்னும் வினைமுற்றுச் சொல்லைக் கொண்டு முடிந்தது. இடையில் எந்தச்செல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது வினையெச்சத் தொடராகும்.

  • பாடி மகிழ்ந்தனர் 
   இதில் ”பாடி” என்னும் எச்ச வினை மகிழ்ந்தனர் என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது. ஆகவே இதுவும் வினையெச்சத் தொடராகும்.

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment