பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 94                                                                                                           இதழ் - 
நாள் : 11-02-2024                                                                                             நாள் : -0-௨௦௨


பழமொழி – 93

” இன்சொல் இடர்ப்படுப்ப தில் 
 
விளக்கம்
  இனிமையான சொற்கள் யார் ஒருவரையும் புண்படுத்துவதில்லை  என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

        புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின்(று) உணர்கிற்பார்
        வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
        புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை
        'இன்சொல் இடர்ப்படுப்ப தில்'.

    ஒருவரைப் புண்படுத்தும் சொற்களைப் பேசிக் காயப்படுத்தினால் அச்சொற்கள் அவரை துன்பத்தில் கொண்டு போய்விடும். ஆனால் இனிமையான சொற்கள் ஒரு போதும் துன்பத்தில் கொண்டு போய் விடுவதில்லை. 

        புண்படுத்தும் சொற்களும் இனிமையான சொற்களும் தருகின்ற பயனை உணர்ந்தவர்கள் பிறரைப் புண்படுத்தும் சொற்களைப் பேசமாட்டார்கள் என்பதை உணர்த்தவே 'இன்சொல் இடர்ப்படுப்ப தில்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment