இதழ் - 49 இதழ் - ௪௯
அகம்
அகம் என்னும் சொல்லுக்கு உட்புறம் என்று பொருள். இச்சொல் முதலில் வீட்டுக்கு அமைந்து, அப்பால் வீடுகளையுடைய ஊரைக் குறித்தது. அவ்வாறு சில ஊர்ப் பெயர்களில் அகம் என்ற சொல் அமைந்திருக்கின்றது.
திருஏரகம் என்பது ஓர் ஊரின் பெயர். அது முருகனது படை வீடுகளில் ஒன்றாகும் (சுவாமிமலை). பாண்டி நாட்டில் வைகை யாற்றங்கரையில் திருஏடகம் என்னும் ஊர் உள்ளது. இராமநாதபுரத்தில் கையகம் முதலிய மருதகம், கையகம் முதலிய பெயருடைய ஊர்கள் காணப்படுகின்றன. திருச்சி நாட்டில் கல்லகம் என்பது ஓர் ஊரின் பெயர்.
உள்
உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும். சென்னை மாநகர்க்கு இருபத்தைந்து மைல் தூரத்தில் வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய எவ்வுள் என்னும் ஊர் உள்ளது. திருமங்கையாழ்வாரும் திருமழிசையாழ்வாரும் அப்பதியைப் பாடியுள்ளனர். நாளடைவில் திருஎவ்வுள் என்றும், திருஎவ்வுளூர் என்றும் அழைக்கப்பெற்ற அவ்வூர், இக்காலத்தில் திருவள்ளூர் என வழங்குகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment