பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 60                                                                                          இதழ் - 0
நாள் : 18-06-2023                                                                            நாள் : -0-௨௦௨௩
 
     
வினையெச்சம்
    ஒரு வாக்கியம் வினையைக் கொண்டு முடிவது வினையெச்சமாகும். பெயரெச்சத்தையோ, வினையெச்சத்தையோ, முற்றையோ கொண்டு முடிவதாகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.
 
சான்று
  • சென்று வந்தான் 
    இதில் ‘சென்று’ என்னும் சொல் ‘வந்தான்’ என்னும் வினைச்சொல்லைக் கொண்டு பொருள் முடிவைத் தருகிறது. இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
 
வினையெச்சம் - வகைகள்
வினையெச்சம் கால அடிப்படையில் மூன்று வகைப்படும். அவை,
  • இறந்தகால வினையெச்சம்
  • நிகழ்கால வினையெச்சம்
  • எதிர்கால வினையெச்சம் 
இறந்தகால வினையெச்சம்
  • இறந்தகால வினையெச்சம் உ, இ, ய் என்பவற்றை விகுதிகளாகப் பெற்று வரும்.
சான்று
  • வந்து போனான், பாடி ஆடினான், போய் நின்றான்

நிகழ்கால வினையெச்சம்
  • நிகழ்கால வினையெச்சம் பெரும்பாலும் “அ” என்னும் விகுதி பெற்று வரும்.
சான்று
  • பாட வருகிறான்.

எதிர்கால வினையெச்சம்
  • இன், ஆல், வான், பான் என்னும் விகுதிகளுள் ஒன்றைப் பெற்று வரும்.
சான்று
  • செய்யின் தருவேன், வந்தால் கொடுப்பேன்.
 
    “செய்து, செய்பு, செய்யா, செய்யூ,
     செய்தென, செய, செயின்,  செய்யிய, செய்யியர்
     வான், பான், பாக்கு இனவினையெச்சம்: பிற
     ஐந்து, ஒன்று, ஆறும் முக்காலமும் முறைதரும்.” 
                                ( நன்னூல் நூற்பா.343 )
 
 
    இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment