இதழ் - 180 இதழ் - ௧௮௦
நாள் : 26 - 10 - 2025 நாள் : ௨௬ - ௧௦ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 180
' ஒக்கலை வேண்டி அழல் '
விளக்கம்
தம்மை மதியாத ஒருவரைத் தாம் ஒதுக்கி விடுதலே சிறப்பு. அவரோடு நாம் உறவாடினால் நமக்குத்தான் கேடு வரும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
முகம்புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை
அகம்புகுதும் என்றிரக்கும் ஆசை, இருங்கடத்துத்
தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார்
'ஒக்கலை வேண்டி அழல்'.
இங்கு ஒக்கலை என்றால் ஒத்துழைப்பு என்று பொருள்.
பெரிய காட்டு வழி நடக்கும் பெற்றோரிடம் ஓர் குழந்தை நடக்கும் சக்தியிருந்தும் ஒத்துழைப்புக்காக தூக்கி நடக்க அழும் பிடிவாதத்தை ஏற்கக் கூடாது. ஏனென்றால் அது பெரிதும் துன்பம் தருவது என்பதனை அவரே அறிவார்.
அதுபோலவே, தம் முகத்தை வெளியிலே கண்டாலும் பொறுக்காத பகைவர் ஒருவரை வீட்டிற்கு போகலாம் வாருங்கள் என்று அழைப்பது பொருத்தமற்ற ஆசையேயாகும். மேலும் அது துன்பத்தையே தரும் என்பதைக் குறிக்கவே 'ஒக்கலை வேண்டி அழல்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் வரும் வாரங்களில் தொடர்ந்து அறிவோம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment