பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 84                                                                                                இதழ் - 
நாள் : 03-12-2023                                                                                 நாள் : --௨௦௨௩

 
விகாரப் புணர்ச்சி

விகாரப் புணர்ச்சி
  • இரண்டு சொற்கள் பொருள் தரும் வகையில் ஒன்றோடு ஒன்று சேரும்போது விகாரம் அடைந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். 
  • புணர்ச்சியின்போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். 
வகைகள்
  • விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும். 
     அவையாவன,
    1. தோன்றல் விகாரம் 
    2. திரிதல் விகாரம்
    3. கெடுதல் விகாரம்
1. தோன்றல் விகாரம் (மெய் தோன்றியது)
  • இரண்டு சொற்கள் புணர்ச்சியின் போது புதிய எழுத்தொன்று தோன்றின் அது தோன்றல் விகாரம் எனப்படும். 
சான்று
  • வாழை  +  பழம் = வாழைப்பழம்.
  • மாலை +  பொழுது = மாலைப்பொழுது
  • பலா +  சுளை = பலாச்சுளை

2. திரிதல் விகாரம் (மெய் திரிந்தது)
  • இரண்டு சொற்கள் புணர்ச்சியின் போது நிலைமொழியிலுள்ள இறுதி எழுத்து வேறொரு எழுத்தாக மாற்றம் அடைந்தால் அது திரிதல் விகாரம் எனப்படும். 
சான்று
  • கல்  + குகை     =   கற்குகை
  • பொன் + சிலை =  பொற்சிலை 

3. கெடுதல் விகாரம் (மெய் கெட்டது)
  • இரண்டு சொற்கள் புணர்ச்சியின் போது நிலைமொழியின் இறுதியில் உள்ள மெய் எழுத்து கெடுமாயின் அது கெடுதல் விகாரம் எனப்படும்.
சான்று
  • மரம்  + வேர் = மரவேர்
  • பணம் + வரவு = பணவரவு

    தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...

 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment