இதழ் - 93 இதழ் - ௯௩
நாள் : 04-02-2024 நாள் : 0௪-0௨-௨௦௨௪
பழமொழி – 93
” கூத்தாடி கிழக்கே பார்ப்பான்,
கூலிக்காரன் மேற்கே பார்ப்பான் ”
விளக்கம்
ஊருக்கு நடுவில் கூத்து ஆடும் கூத்தாடி விடிந்து விட்டதா என கிழக்கே பார்ப்பான். கூலிக்கு வேலை செய்பவன் பொழுது சாய்ந்து விட்டதா என மேற்கே பார்ப்பான் என்பது இப்பழமொழியின் விளக்கமாகும்.
உண்மை விளக்கம்
ஊருக்கு நடுவில் கூத்து ஆடிக்கொண்டிருக்கும் ஓர் கூத்தாடி கிழக்கே பார்த்து சூரியன் உதிப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பான். ஏனெனில் விடிந்து விட்டால் தன் ஆட்டத்தை நிறுத்தி வீட்டிற்குச் செல்ல முடியும் என்று கிழக்கே பார்ப்பான்.
அதேபோல் கூலிக்குப் பணிக்கு வந்த ஒருவன் மேற்கே சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டே இருப்பான். ஏனெனில் பணி நிறைவடைந்து விட்டால் தன் பணியை நிறுத்தி வீட்டிற்குச் செல்ல முடியும் என்று மேற்கே பார்ப்பான்.
இந்த இருவரின் எண்ணங்களையும் ஒருங்கே சொல்வதைக் குறிக்கவே “கூத்தாடி கிழக்கே பார்ப்பான், கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment