பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 104                                                                                           இதழ் - 0
நாள் : 21-04-2024                                                                             நாள் : -0-௨௦௨


பழமொழி – 104

” உடுத்தாரை உண்டி வினவுவார் இல் ”

விளக்கம்
    ஒருவன் ஏழையாக இருப்பினும் நன்றாக உடை அணிந்து வருபவர்களைக் கண்டு பசிக்கு உணவு உண்கிறீர்களா? என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

        அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்
        புறத்தால் பொலிவுறல் வேண்டும் - எனைத்தும்
        படுக்கை இலராயக் கண்ணும் 'உடுத்தாரை
        உண்டி வினவுவார் இல்'.
            
    ஒருவன் வறுமையின் பிடியால் உண்பதற்கு உணவில்லாத சூழலிலும் நேர்த்தியாக (சுத்தமாக) உடையணிந்து வரவேண்டும். இதனை “கந்தலானாலும் கசக்கிக் கட்டு” என்ற முதுசொல்லால் தெளியலாம்.

    அவ்வாறு ஒருவன் பசியில் இருந்தாலும் தன் வறுமையைக் ஆடையில் காண்பிக்காதவனைக் கண்டு பசிக்கு உணவு உண்கிறீர்களா? என்று யாரும் கேட்க மாட்டார்கள். மேலும் உயர்குடிப் பிறந்தவர் எத்தகைய வறுமை தனக்கு வந்தாலும், பிறர் அதனைக் கண்டு தம்மீது கருணை கொள்ளுமாறு தம்மை தரம் தாழ்த்திக் கொள்ளமாட்டார்கள் என்பதை விளக்கவே 'உடுத்தாரை உண்டி வினவுவார் இல்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment