இதழ் - 146 இதழ் - ௧௪௬
நாள் : 23 - 02 - 2025 நாள் : ௨௩ - ௦௨ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 146
“ காலம் போகும் வார்த்தை நிற்கும் ”
விளக்கம்
காலம் சென்றாலும் வார்த்தை நிலையாக நிற்கும் என்பது இப்பழமொழிக்கு விளக்கம் ஆகும்.
“ காலம் போகும் வார்த்தை நிற்கும் ”
உண்மை விளக்கம்
ஒரு செயலைச் செய்ய நாம் ஒருவருக்கு வாக்கு (உத்திரவாதம்) கொடுத்து விட்டால் அதைத் தக்க காலத்தில் செய்து முடித்தல் வேண்டும். அதை விடுத்து காலம் தாழ்த்திக் கொண்டிருப்பின் நம் நம்பிக்கையின்மை ஏற்படும்.
காலம் சென்றாலும் நாம் கொடுத்த வார்த்தை என்றென்றும் நிலையாக நிற்கும் என்பதைக் குறிக்கவே “காலம் போகும் வார்த்தை நிற்கும்” இந்தப் பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment