பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 88                                                                                                     இதழ் - 
நாள் : 31-12-2023                                                                                        நாள் : --௨௦௨௩

பழமொழி – 88


” இறந்தது பேர்தறிவார் இல் 
 

விளக்கம்
    ஒருவர் தம்முடைய உடமைகளைத் தாமே பேணிப்பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் பிறர் பாதுகாப்பர் என்று விட்டால் அவ்வுடமைகளை இழப்பர் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

            மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால்
            சிறந்தார் தமரென்று தோற்றார்கை வையார்
            கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப!
            'இறந்தது பேர்தறிவார் இல்'.

    ஒருவன் தன்னிடத்திலுள்ள உடமைகளைத் தானே பேணிப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து தன் சுற்றத்தார் சிறந்தவர்கள் எனக் கருதி அவர்களை நம்பி நம் உடமைகளை விட்டு வந்தால் நாம் நம் உடமைகளை இழக்க நேரிடும். மேலும் இழந்த உடமைகளைத் திரும்ப கொண்டு வருதலும் கடினம் என்பதையே 'இறந்தது பேர்தறிவார் இல்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

  மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment