பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 143                                                                                     இதழ் - ௧
நாள் : 02 - 02 - 2025                                                                 நாள் :  -  - ௨௦௨



குறுநில மன்னர் - காரி

      கடைவள்ளல் எழுவரில் காரி என்பவன் ஒருவன். அவன் சிறந்த குதிரை வீரன். சங்க இலக்கியத்தில் மலையமான் திருமுடிக்காரி என்று அவன் குறிக்கப்படுகின்றான். சேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள கார்குடி என்னும் ஊர் அச்சிற்றரசனோடு தொடர்புடையதாகத் தெரிகின்றது. சாசனங்களில் அவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது. சேலம் நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு.


குறுநில மன்னர் - ஓரி

     திருமுடிக் காரியின் பெரும் பகைவன் ஓரி என்பவன். அவன் வில்லாற்றலில் சிறந்த வீரன்; சிறந்த கொடையாளன். வல்வில் ஓரி என்று பண்டைப் புலவர்கள் அவனைப் பாராட்டினார்கள். கோவை நாட்டுப் பவானி வட்டத்தில் ஓரிசேரி என்னும் ஊர் உள்ளது. அவ்வூர் இம்மன்னன் பெயரோடு தொடர்புடையதாகத் தெரிகின்றது.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment