பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 86                                                                                                       இதழ் - 
நாள் : 17-12-2023                                                                                          நாள் : --௨௦௨௩


 
முனையர்
 
        பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த பல்வேறு சமூகத்தினருள் முனையர் என்ற பிரிவினரும் அடங்குவர். அவர்கள் சிறந்து வாழ்ந்த இடம் முனைப்பாடி என்று பெயர் பெற்றது. அவ்வூரைத் தன் அகத்தே கொண்ட நாடு திருமுனைப்பாடி நாடு. தேவாரம் பாடிய மூவரில் இருவரை ஈந்தது அந்த திருமுனைப்பாடி நாடே. சுந்தரர் வாழ்ந்த காலத்தில் நரசிங்க முனையர் என்னும் சிற்றரசன் திருமுனைப்பாடி நாட்டை ஆண்டு வந்ததாகத் திருத்தொண்டர் புராணம் தெரிவிக்கின்றது. திருமுனைப்பாடி என்னும் ஊர் தற்காலத்தில் தென்னாற்காட்டு பகுதியில் இருந்த ஊர்களுள் ஒன்றாகும்.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment