இதழ் - 177 இதழ் - ௧௭௭
நாள் : 05 - 10 - 2025 நாள் : ௦௫ - ௧௦ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 177
' அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது '
விளக்கம்
ஆற்று வெள்ளம் அணையை உடைத்து வெளியே வந்து விட்டால் நாம் எவ்வளவு முயன்றாலும் அது அணைக்குத் திரும்ப வராது என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.
உண்மை விளக்கம்
' அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது '
இங்கு ஆற்று வெள்ளம் அணையை உடைத்து வெளியே வருவதை சொல்லியிருப்பினும் இப்பழமொழி மனிதர்களில் பலர் பேசும்போது வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்தி மற்றவர்களின் மனம் நோகச் செய்வர். அவ்வாறு பேசிய சொல்லைத் திரும்பப்பெற முடியாது. அதுமட்டுமின்றி நாம் ஒருமுறை தவறவிட்ட வாய்ப்பு திரும்பக்கிடைக்காது என்பதையும் குறிக்கவே “அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
நேரத்தையும் வாய்ப்பையும் நாம் எந்தச்சூழலிலும் தவறவிடக்கூடாது என்பது இப்பழமொழியின் உள்ளார்ந்த கருத்தாகும்.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment