பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 24                                                              இதழ் -  
நாள் : 09-10-2022                                                நாள் : ௦௯--௨௦௨௨
 
 
 
ஓரெழுத்து ஒருமொழி
 
     ஓர் எழுத்து மட்டும் தனித்து ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஓரெழுத்து ஒருமொழி ஆகும். (மொழி – சொல்)
 
     ”  உயிர் மவில் ஆறும் த, ப, நவில் ஐந்தும்
       க, வ, சவில் நாலும் யவ்வில் ஒன்றும்
       ஆகும் நெடில் நொ,து ஆம்குறில் இரண்டோடு
       ஓரெழுத்து இயல்பதம் ஆறுஏழ் சிறப்பின "   (நன்னூல் 129)

 
     நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ,து ஆகிய இரண்டு சொற்களைத் தவிர ஏனைய 40 சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவையாகும்.
 
அவையாவன,
 
உயிர் வருக்கத்தில் - 6
  • ஆ - பசு
  • ஈ - பறக்கும் பூச்சி
  • ஊ -இறைச்சி
  • ஏ - அம்பு
  • ஐ - தலைவன்
  • ஓ - சென்று தாக்குதல்
 
“ம“கர வருக்கத்தில் - 6
  • மா - பெரிய
  • மீ - மேலே
  • மூ - மூப்பு
  • மே -மேன்மை
  • மை - கண் மை
  • மோ - முகர்தல்

“த“கர வருக்கத்தில் - 5
  • தா கொடு
  • தீ நெருப்பு
  • தூ பறவை இறகு
  • தே கடவுள்
  • தை - தமிழ் மாதம்
  •  
“ப“கர வருக்கத்தில் – 5
  • பா பாட்டு
  • பூ மலர்
  • பே – வேகம்
  • பை கைப்பை
  • போ செல்
 
“ந“கர வருக்கத்தில் - 5
  • நாநாக்கு
  • நீ நீ
  • நை – இகழ்ச்சி
  • நோ - வலி
  • நே அன்பு
 
“க“கர வருக்கத்தில் - 4
  • கா சோலை
  • கூ பூமி
  • கோ வேந்தன்
  • கை உறுப்பு
“வ“கர  வருக்கத்தில் - 4
  • வா வருகை
  • வீ – மலர்
  • வை - வைக்கவும்
  • வௌ கௌவுதல்
 
“ச“கர வருக்கத்தில் - 4
  • சா – சாதல்
  • சீ – வெறுப்புச்சொல்
  • சே சிவப்பு
  • சோ அரண்
 
“ய“கர வருக்கத்தில் - 1  
  • யா - ஒருவகை மரம்
 
தனிக்குறில் பதம் - 2
  • நொ வருந்து
  • து உண்
     இவையாவும் இலக்கியத்திலும் பேச்சுவழக்கிலும் பயின்று வருவதை யாவரும் அறியலாம்.

( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020

 

No comments:

Post a Comment