இதழ் - 205 இதழ் - ௨0௬
நாள் : 22 / 11 / 2026 நாள் : ௨௨/ ௧௧ / ௨௦௨௬
பெருந்திணை
பெருந்திணை விளக்கம், பெருந்திணையின் வகைகள், அக இலக்கியங்களிலும், புறநானூற்றிலும் பெருந்திணை அமைந்துள்ள தன்மை ஆகியவற்றை இப்பகுதியில் அறியலாம். பெருந்திணை பாடிய புலவர் பெயர்களையும் அறியலாம்.
பெருந்திணை விளக்கம்
- பெருந்திணையைப் பொருந்தாக்காமம் அல்லது ஒவ்வாக்கொள்ளும் காதலே பெருந்திணை ஆகும். இப்பொருத்தமின்மை பற்றிப் பெருந்திணையின் இலக்கணத்தில் விளக்கமாகக் காணலாம்.
பாடியபுலவர்கள்
- கலித்தொகையில் மருதம், முல்லை, நெய்தல் திணைகளில் அமைந்த பதினான்கு பாடல்கள் பெருந்திணைக்கும் உரியனவாக உள்ளன. புறநானூற்றில் ஐந்து பாடல்கள் (பாடல் எண்கள்: 143, 144, 145, 146, 147) பெருந்திணையைச் சார்ந்துள்ளன.
- மருதக்கலியில் இரண்டு பாடல்களும் (பாடல் எண்கள்: 62, 94 மருதனிளநாகனார்) முல்லைக்கலியில் இரண்டு பாடல்களும் (பாடல் எண்கள்: 112, 113 சோழன் நல்லுருத்திரன்) நெய்தல்கலியில் பத்துப் பாடல்களும் (பாடல் எண்கள்: 138 முதல் 147வரை நல்லந்துவனார்) பெருந்திணையில் அமைந்தவை ஆகும்.
- புறநானூற்றில் 143ஆவது பாடலைக் கபிலரும், 144, 145ஆவது பாடல்களைப் பரணரும், 146ஆவது பாடலை அரிசில்கிழாரும், 147ஆவது பாடலைப் பெருங்குன்றூர் கிழாரும் பாடியுள்ளனர்.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment