இதழ் - 54 இதழ் - ௫௪
நாள் : 07-05-2023 நாள் : 0௭-0௫-௨௦௨௩
வினைச்சொல்
ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல். அதன் தொழிலைக் குறிப்பது வினைச்சொல். மொழிக்கு இன்றியமையாத உறுப்பு வினைச்சொல்லாகும். வினை, தொழில், செயல் என்பவை ஒரு பொருட்சொற்கள்.
சான்று
”தமிழரசி படித்தாள்” என்ற தொடரில் தமிழரசி என்ற பெயரின் செயலைக் குறிப்பது ‘படித்தாள்’ என்னும் வினைச்சொல். இதில் படித்தாள் என்பது வினையை மட்டும் குறிக்கவில்லை. காலத்தையும் குறிப்பிடுகின்றது. எனவே, வினைச்சொல் செயலோடு காலத்தையும் குறிப்பிட்டு வரும்.
வினைச்சொல்லின் பொது இலக்கணம் :
- வினைச்சொற்கள் காலம் காட்டும்.
- வினைமுற்றாக வரும்.
- வினை எச்சமாக வரும்.
- அடைமொழிகளை ஏற்று வரும்.
- உயர்திணை, அஃறிணை, பொதுத்திணை மூன்றிலும் வரும்.
- வினை விகுதிகள் திணை, பால், எண், இடம், ஆகியவற்றை உணர்த்தும்.
- வேற்றுமை உருபுகளை ஏற்காது.
இவையே வினைச்சொல்லின் பொது இலக்கணம் ஆகும்.
இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment