இதழ் - 111 இதழ் - ௧௧௧
நாள் : 10-06-2024 நாள் : ௧0-0௬-௨௦௨௪
பழமொழி – 111
" ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி "
விளக்கம்
ஓட்டை விழுந்த கப்பலை வழிநடத்த ஒன்பது மாலுமிகள் தேவையா என்பது போல நாம் இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக்கொள்கிறோம்.
" ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி "
உண்மை விளக்கம்
இங்கு ஓட்டைக் கப்பல் என்பது மனித உடலைக் குறிக்கிறது. ஒன்பது மாலுமி என்பது நம் உடலில் உள்ள ஒன்பது துவாரங்களைக் குறிக்கிறது.
மனித வாழ்க்கை நிலையில்லாதது. நம் உடலில் உள்ள மூச்சுக்காற்று எப்போது வேண்டுமானாலும் இத்துவாரங்களின் வழி வெளியே சென்றுவிடும். அத்தகைய நிலையில்லா வாழக்கையில் மனிதனுக்கு மனிதன் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் போட்டி பொறாமைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையும் உணா்த்தவே “ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி“ என்ற இப்பழமொழியை நம் முன்னோா்கள் பயன்படுத்தியுள்ளனா்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment