இதழ் - 98 இதழ் - ௯௮
நாள் : 10-03-2024 நாள் : ௧0-0௩-௨௦௨௪

தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
டபாய் | ஏமாற்று |
ஜிந்தாபாத் | வாழ்க, வெல்க |
ஜெய்ஹிந்த் | இந்தியா வெல்க |
தர்ணா | மறியல் |
நமஸ்தே | வணக்கம் |
- ஏய்! டபாய்க்காதே.
- ஏய்! ஏமாற்றாதே.
- தமிழகம் ஜிந்தாபாத்.
- தமிழகம் வாழ்க, வெல்க.
- ஜெய்ஹிந்த் என முழங்குவோம்.
- இந்தியா வெல்க என முழங்குவோம்..
- பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தின் முன் தர்ணா நடத்தினார்கள்.
- பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தின் முன் மறியல் நடத்தினார்கள்.
- நமஸ்தே வாருங்கள்.
- வணக்கம் வாருங்கள்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment