இதழ் - 76 இதழ் - ௭௬
நாள் : 08-10-2023 நாள் : 0௮-௧0-௨௦௨௩
பழமொழி – 76
”இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை,
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு ”
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு ”
விளக்கம்
ஒருவன் தன் ஒழுக்கக் குறைபாட்டால் இழிவுடையவரானால் அதைவிட இழிவு தரும் செயல் எதுவும் இல்லை. அதேபோல் ஒருவன் தன் ஒழுக்கத்தின் உயர்வால் வரும் சிறப்பிற்கும் நிகர் ஏதுவும் இல்லை என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாத தில்லை ஒருவற்கு - நல்லாய்!
'இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை,
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு'.
கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாத தில்லை ஒருவற்கு - நல்லாய்!
'இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை,
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு'.
கல்லாதவன் ஒருவனிடம் சென்று இவ்வுலகின் உறுதிப் பொருள் பற்றிக் கேட்டு உரைப்பின் அதைவிட மிகுதியான ஒரு பொல்லாங்கு (பழிச்சொல்) இல்லை. ஏனெனில் அவன் கேட்டவரையே அவமதிக்க முற்படுவான். ஆகையால் பொல்லாங்கே மிகுதியாகும். இச்செயல் அவரவர் கல்வி அறிவினாலும் தன் ஒழுக்கத்தின் சிறப்பினாலும் வருவனவாகும் என்பதையே 'இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை, ஒழுக்கத்தின் மிக்க உயர்வு' என்ற இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment