பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 38                                                                                         இதழ் -
நாள் : 15-01-2023                                                                            நாள் : -0-௨௦௨
 
 
 
மூவிடப்பெயர்கள்
 
 
     தமிழ் இலக்கணத்தில் பேசுபவர், பேசுபவர் முன்னால் நிற்பவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் உள்ள வேறுபாடுகளைக் காட்டும்.
 
இலக்கணக்கூறு இடம் எனப்படுகிறது. 
இடம் மூன்று வகைப்படும்.
அவையாவன
  • தன்மை
  • முன்னிலை
  • படர்க்கை
 
     “தன்மை நான்கும், முன்னிலை ஐந்தும்,
     எல்லாம் தாம் தான் இன்ன பொதுப்பெயர் ”
    (நன்னூல். நூ. எ. 282)

தன்மைப் பெயர்
  • பேசுபவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் குறித்து வரும் பெயர் தன்மைப் பெயர் எனப்படும். 
  • சுருங்கக் கூறின் தன்னைப் பற்றியது தன்மைப் பெயர். இது இரண்டு வகைப்படும்.
  • தன்மை ஒருமைப் பெயர்
  • தன்மைப் பன்மைப் பெயர்

தன்மை ஒருமைப் பெயர்
  • ஒருவரைக் குறிப்பது தன்மை ஒருமைப் பெயர் ஆகும்.
     (எ-டு) யான், நான்

தன்மைப் பன்மைப் பெயர்கள்
  • பலரைக் குறிப்பது தன்மைப் பன்மைப் பெயர் ஆகும்.
     (எ-டு) யாம், நாம், யாங்கள், நாங்கள்.

     தன்மைப் பன்மையில் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என இரு வகை உண்டு.

1. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை


     பேசுபவர் (தன்மை) முன்னிலை யாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை ஆகும்.

சான்று
  • நாம் முயற்சி செய்வோம்
     இத்தொடரில் நாம் என்பது தன்மை முன்னிலையில் உள்ள அனைவரையும் குறிக்கிறது.

2. உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

     பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது உளப்படுத்தாத தன்மைப் பன்மை ஆகும்.

சான்று
  • நாங்கள் முயற்சி செய்வோம்
 
 
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் அறியலாம் . .
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020
 
 

No comments:

Post a Comment