இதழ் - 94 இதழ் - ௯௪
நாள் : 11-02-2024 நாள் : ௧௧-0௨-௨௦௨௪
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
பேதம் | வேறுபாடு |
தைலம் | எண்ணெய் |
நிதர்சனம் | கண்கூடு |
பரிதாபம் | இரக்கம் |
பூர்வ ஜென்மம் | முற்பிறப்பு |
- ஆசிரியர் மாணவர்களுக்கிடையே பேதம் பார்த்தல் கூடாது.
- ஆசிரியர் மாணவர்களுக்கிடையே வேறுபாடு பார்த்தல் கூடாது.
- அம்மம்மா கால் வலிக்குத் தைலம் போட்டார்கள்.
- அம்மம்மா கால் வலிக்கு எண்ணெய் போட்டார்கள்.
- பிறருக்குத் தீமை செய்வோர் துன்பப்படுவது நிதர்சனம்.
- பிறருக்குத் தீமை செய்வோர் துன்பப்படுவது கண்கூடு.
- பிற உயிர்களின் துன்பத்தைக்கண்டு பரிதாபம் கொள்ளுங்கள்.
- பிற உயிர்களின் துன்பத்தைக்கண்டு இரக்கம் கொள்ளுங்கள்.
- பூர்வ ஜென்மப் பலன் என்பது இல்லை என ஆசிவகம் சொல்கிறது.
- முற்பிறப்புப் பலன் என்பது இல்லை என ஆசிவகம் சொல்கிறது.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment