பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 105                                                                                         இதழ் - 0
நாள் : 28-04-2024                                                                        நாள் : -0-௨௦௨


மகர ஈற்றுப் புணர்ச்சி

  • மகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு சேரும் பொழுது, இறுதி மகரம் கெட்டு, உயிரீறுபோல நின்று, உயிர் முதல் மொழியோடு உடம்படுமெய் புணரும்.
            "  மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் 
              வன்மைக்கு இனமாய்த் திரிபவும் ஆகும் "
                               - நன்னூல், நூற்பா எண் - 219

சான்று

மரவடி = மரம் + அடி 
  • மரவடி (மவ்வீறு  ஒற்று அழிந்தது)
  • மர + அடி   - ( நிலைமொழி இறுதி எழுத்து மகரம் (ம்) கெட்டது)
  • மர+வ்+அடி- (உயிர்முதல் மொழியோடு உடம்படுமெய் ‘வ்’ தோன்றிற்று)
  • மரவடி - ஆயிற்று

       தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment