இதழ் - 88 இதழ் - ௮௮
நாள் : 31-12-2023 நாள் : ௩௧-௧௨-௨௦௨௩
அதியர்
தமிழ் நாட்டில் வாழ்ந்த பழமை மிக்க குலத்தோரில் அதியர் குறிப்பிடத்தக்கவர்கள். அக்குலத்தின் தலைவன் அதியன் என்றும், அதியமான் என்றும், அதியர் கோமான் என்றும் வழங்கப் பெற்றான்.
ஒரு காலத்தில் அதியமான் ஆட்சி தமிழ் நாட்டில் பெரும் பகுதியில் நிலவியிருந்ததாகத் தெரிகின்றது. அக்குலத்தைச் சார்ந்த அதியர் தலைவருள் சிறந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சியாவான்.
அவனது நாட்டின் தலைநகர் தகடூர் என்று தமிழ் இலக்கியம் கூறும். அவ்வூருக்கு ஐந்து மைல் தூரத்தில் அதமன் கோட்டை என்னும் பெயருடைய ஊர் அமைந்திருக்கின்றது. முன்னாளில் அங்கிருந்த கோட்டையின் அடையாளங்கள் இன்றும் காணப்படும். அக்கோட்டை அதியமானால் கட்டப்பட்டது. அதியமான் கோட்டை என்பது அதமன் கோட்டையென மருவியிருத்தல் கூடும். இன்னும், சேலம் நாட்டிலுள்ள அதிகப்பாடியும், செங்கற்பட்டிலுள்ள அதிகமான் நல்லூரும் அவ்வரசனோடு தொடர்புடைய ஊர்ப்பெயர்களாக அமைந்துள்ளன.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment