இதழ் - 187 இதழ் - ௧௮௭
நாள் : 04 - 01 - 2026 நாள் : 0௪ - 0௧ - ௨௦௨௬
வஞ்சிப்பூவினைச் சூடி மாற்றான் மண்ணைக் கவரக் கருதி படையெடுத்துச் செல்லுதல் வஞ்சித்திணை எனப்படும்.
11. உழபுல வஞ்சி
வஞ்சி மன்னன் பகைவர் நாட்டினைத் தீயிட்டுக் கொளுத்துதல்.
12. மழபுல வஞ்சி
வஞ்சி மன்னன் பகைவர் நாட்டுப் பொருட்களைக் கொள்ளையடித்தல்.
13. கொடை வஞ்சி
தனது வெற்றியைப் பாடிய புலவர்க்கு வஞ்சியரசன் பரிசு வழங்குதல்.
14. குறவஞ்சி
வஞ்சியரசனை எதிர்த்துப் போர் செய்யும் பகையரசன் பணிந்து திறை செலுத்துவது
மற்றும் போர் செய்யாமல் பகைவரைப் பணிய வைத்து பாசறையிலே தங்கியிருத்தல்.
15. ஒருதனிநிலை
தன்னந்தனியாளாக நின்று பகைவரைத் தடுத்த வஞ்சி மறவனின் நிலையைக் கூறுவது.
16. தழிஞ்சி
போரில் அஞ்சி ஓடுபவர்கள் மீது படைத்தொடுக்காத தன்மையினைக் கூறுவது.
17. பாசறைநிலை
பகையரசன் பணிந்த பின்னரும் வஞ்சி அரசன் பாசறைக் கண் தங்கியிருப்பது.
18. பெருவஞ்சி
முன்பு தீயிட்டும் (உழபுல வஞ்சி) பணியாத பகை மன்னனது நாட்டின் மீது மறுமுறையும் தீயிட்டு அழிப்பது.
19. பெருஞ்சோற்று நிலை
வஞ்சி வேந்தன் தனது படைமறவர்களுக்கு மிகுந்த சோற்றைக் கொடுத்தது.
20. நல்லிசை வஞ்சி
வஞ்சி வேந்தனது வெற்றியைப் புகழ்ந்துப் பாடுதல் மற்றும் அவனால் அழிந்துப்பட்ட பகை நாட்டிற்காக வருந்திப் பாடுதல் ஆகியவையும் ஆகும்.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment