இதழ் - 178 இதழ் - ௧௭௮
நாள் : 12 - 10 - 2025 நாள் : ௧௨ - ௧௦ - ௨௦௨௫
திருஞானசம்பந்தர்
சைவ சமய நாயன்மார்களில் முதன்மையானவராகக் கருதப்படும் திருஞானசம்பந்தர் சிறந்த தமிழ் புலவர் எனவும் கூறிக்கொள்ளலாம்.
கி.பி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான திருஞானசம்பரது பிறப்பு நிகழ்ந்த போதே தமிழ் மொழி மங்கி வலுவிழந்து காணப்பட்டது என்பதனை வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
திருஞானசம்பந்தர் தமிழ் மொழியைச் சிறப்பித்துக் கூறும் முகமாக தனது பாடல்களை தமிழ் மாலை என்கிறார் .அது மட்டுமின்றி தனது பெயருக்குத் தமிழ் என்ற அடைமொழியைக் கொடுத்துத் தன்னைச் சிறப்பித்துக் கொள்கிறார்.
சான்றாக,
”தமிழ்ஞான சம்பந்தன் உரைசெய் "
"முத்தமிழ் விரகனே நானுரைத்த செந்தமிழ் பத்துமே"
"சம்பந்தன் நலங்கொள் தமிழ்"
இவரது காலத்தில் தமிழ் மொழி வழக்கத்தில் இருந்தாலும் அது தனித்துவத்தை இழந்து இருந்துள்ளது என்பதனை இவரது வரலாற்றின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தமிழின் தொன்மையையும் தனித்துவத்தையும் மீட்டு எடுப்பதற்குத் திருஞானசம்பந்தர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
வரும் கிழமையும் தமிழ்ப்புலவர் வருவார்...
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment