இதழ் - 63 இதழ் - ௬௩
நாள் : 09-07-2023 நாள் : 0௯-0௭-௨௦௨௩

தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிற மொழிச் சொற்கள் |
தமிழ் சொற்கள் |
கச்சிதமாக |
சிறப்பாக, ஒழுங்காக |
காவியம் |
தொடர்நிலைச் செய்யுள் |
சந்திப்பு |
கூடல் |
சகோதரன் |
உடன் பிறந்தான் |
சுரணை |
உணர்ச்சி |
- திருவிழா மிகக் கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டது.
- திருவிழா மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.
- புலவர் குழந்தையால் இராவண காவியம் எழுதப்பட்டது.
- புலவர் குழந்தையால் இராவணன் பற்றிய தொடர்நிலைச் செய்யுள் எழுதப்பட்டது.
- முப்பது வருடங்கள் கழிந்து பழைய நண்பர்களின் சந்திப்பு நடந்தது.
- முப்பது வருடங்கள் கழிந்து பழைய நண்பர்களின் ஒன்றுகூடல் நடந்தது.
- சகோதரன் நண்பனைப் போல் நடக்க வேண்டும்
- உடன்பிறந்தான் நண்பனைப் போல் நடக்க வேண்டும்
- தன்மானம் என்ற சுரணையோடு வாழ்.
- தன்மானம் என்ற உணர்ச்சியோடு வாழ்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
கோவை
No comments:
Post a Comment