இதழ் - 201 இதழ் - ௨0௧
நாள் : 31 / 05 / 2026 நாள் : ௩௧ / 0௫ / ௨௦௨௬
பொதுவியல் படலம்
- வெட்சி முதல் பாடாண் ஈறாக கூறப்பட்ட படலங்கள் ஒன்பது.
- ஆவற்றுக்குப் பொதுவாக அமைந்த துறைகளை விளக்குவதால் இது பொதுவியல் திணை எனப்பட்டது.
- ஆசிரியர் இத்திணையை நான்காகப் பகுத்துள்ளார்.
- அவை,
II. சிறப்பில் பொதுவியற்பால
III. காஞ்சி பொதுவியற்பால
IV. முல்லை பொதுவியற்பால என்பவனாம்.
I. பொதுவியற்பால: (12 துறைகள்)
போந்தை:
சிறப்பு பொருந்திய பனம்பூ மாலையைப் புகழ்தல். (சேர நாட்டு பூ)
வேம்பு:
வேப்பம் பூமாலையைப் புகழ்தல். (பாண்டிய நாட்டுப் பூ)
ஆர்:
அத்திப்பூ மாலையைச் சிறப்பித்துக் கூறுவது. (சோழ நாட்டு பூ)
உன்னநிலை:
உன்னம் என்னும் மரத்தினது நிலையைக் கூறுவது.
இம்மரம் நிமித்தம் உணர்த்தும் மரம் ஆகும்.
ஏழக நிலை
அரசிளங் குமாரனாய் ஆட்டுக்கிடாயில் ஏறிவருதல் மற்றும்
இளமையைப் பொருட்படுத்தாமல் அரசுரிமையை ஏற்றல்.
கழல்நிலை
ஓர் அரசனின் வீரக்கழலைப் புகழ்ந்து கூறுவது.
ஓர் அரசனின் வீரக்கழலைப் புகழ்ந்து கூறுவது.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment