பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம் - கபிலர்

இதழ் - 153                                                                           இதழ் - ௧
நாள் : 13 - 04 - 2025                                                         நாள் :  -  - ௨௦௨ 



கபிலர்
 
குறிஞ்சிப் பாட்டு

     பிலரது பூக்களைப் பற்றிய பாடல் வருமாறு, பெரும்பாலும் ஒரு அடியில் மூன்று  பூக்களைப் பாடியுள்ளார். அடைமொழியோடு, எதுகை, மோனை  கலந்த இப்பாடலில் இவர் தொன்னூற்றொன்பது பூக்களை வரிசைப் படுத்தியிருப்பதனைப் படித்துச் சுவைக்கலாம்.

ஒண் செம் காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயம் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை
உரிது நாறு அவிழ் தொத்து, உந்தூழ், கூவிளம்,
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் 
வடவனம், வாகை, வால் பூ குடசம்,
எருவை, செருவிளை, மணி பூ கருவிளை,
பயினி, வானி, பல் இணர் குரவம்,
பசும்பிடி வகுளம், பல் இணர் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை மருதம், விரி பூ கோங்கம்,
போங்கம், திலகம், தேம் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெரும் தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,
ஞாழல், மௌவல், நறும் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணி குலை, கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூ தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர் கொன்றை,
அடும்பு அமர் ஆத்தி, நெடும் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூ பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர் பூ தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைம் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நல்லிருள்நாறி,
மா இரும் குருந்தும், வேங்கையும், பிறவும்
அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்  

இப்பாடலை இரண்டு தடவைகள் வாசித்துப் பாருங்கள். எவ்வெவ் வகைப் பூக்கள் என்பதனைக் கண்டுபிடியுங்கள்.

 வரும் கிழமையும் கபிலர் வருவார் . . . 

சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர் 
தமிழ்த்துறை 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி 
கோயம்புத்தூர் - 641020

No comments:

Post a Comment